IND vs ENG : அணியில் அனைவரிடமும் மறைத்து விட்டேன். எனக்கு இந்த பயம் உள்ளது – கோலி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Shankar
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Dhoni

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி இன்று 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டிக்கு முன்பாக நேற்று பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும். முக்கியமாக semi-final நெருங்க நெருங்க அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வரும். எனக்கும் அழுத்தம் இருக்கிறது நான் பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த அழுத்தத்தை வெளியே சொல்லி அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை.

Shami

அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மேலும் அதனை மறைப்பதும் எனக்கு தெரியும். ஒருவேளை அழுத்தம் இல்லாமல் போனால் தான் எனக்கு சிக்கல் அழுத்தம் இல்லாமல் போனால் நாம் சரியாக விளையாடமாட்டேன். அழுத்தம் இருந்தால் அது என்னை சிறப்பாக விளையாட வைக்கும்.

Kohli

ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக நான் ஆர்வமாகவும் அழுத்தமாகவும் இருப்பேன். ஆனால் அதை என் அணியின் யாருக்கும் சொல்ல மாட்டேன். அவர்களிடம் அதை மறைத்துவிடுவேன். இதுதான் என்னை தொடர்ந்து வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்கிறது. எனவே இன்றைய போட்டியிலும் பயமும் அழுத்தமும் எனக்கு உள்ளது. ஆனால் வெற்றி பெரும் நம்பிக்கையும் என்னிடம் உள்ளது என்று கோலி குறிப்பிட்டார்.

Advertisement