மற்றவர்களை போலத்தான் நானும். எனக்கும் வலிக்கும் – மனம் திறந்த கோலி

இந்திய கிரிக்கெட் அணி 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இந்த அரையிறுதிப் போட்டியில் மழை காரணமாக போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றதால் நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி எடுக்க தடுமாறி தோல்வியை தழுவியது.

ind

இந்த போட்டியில் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடியும் இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக இருந்தும் முக்கியமான போட்டிகளில் தோல்வி அடைவதால் சற்றே விமர்சிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளை குவித்தாலும் தோல்விகளால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் குறித்து விராட் கோலி தற்போது மனம் திறந்துள்ளார்.

- Advertisement -

அது குறித்து அவர் கூறியதாவது : எல்லோரையும் போல நானும் தோல்வியினால் அவதிப்படுவது உண்டு. அவ்வாறு தோல்வி ஏற்படும்போது நான் மிகவும் மனதளவில் கஷ்டப்படுவேன். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியின் போது நான் மிகவும் அவதிப்பட்டேன். அந்த போட்டி தொடக்கத்தில் எப்படியாவது இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன்.

india

இறுதியில் ஆடுகளம் எங்களுக்கு கைகொடுக்காமல் தோற்று வெளியேறினோம். எப்பொழுதும் நான் களம் இறங்கும் போது பெருமையாக நினைத்து களம் இறங்குவேன். அதேபோல அவுட் ஆகி வெளியே வரும்பொழுது என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்கு கொடுத்து விட்டு வெளியேறுவேன். தோல்வியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அனைத்து போட்டியிலும் வெற்றி பெறவே நான் நினைத்து விளையாடுவேன் என்று கோலி கூறினார்

- Advertisement -
Advertisement