எனக்கு இப்படி விளையாடிவருவது சற்று கடினமாக உள்ளது. மேலும் வெறுப்பாக இருக்கிறது – விராட் கோலி பேட்டி

Kohli

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

Kohli

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது கோலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த எனது ஆட்டத்திறனை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் வெறுப்படைய வைத்துள்ளது, மேலும் கடினமானது.

Kohli

ஏனெனில் நான் தொடர்ச்சியான போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் தான் என்னுடைய இடத்தை தக்கவைக்க முடியும். மேலும் நான் தொடர்ந்து அணிக்காக போராடி வருகிறேன். மேலும் அணிக்கு எனது பேட்டிங் தேவைப்படுவதால் நான் ஒவ்வொரு போட்டியிலும் மிக கவனமாக ஆடுகிறேன் அதனால் தொடர்ந்து என்னால் சிறப்பாக விளையாடமுடிகிறது. மேலும் சதத்தை பற்றி நான் அதிகம் யோசிப்பது கிடையாது என்று கோலி கூறினார்.

- Advertisement -
Advertisement