என் ஆட்டத்தை பின்பற்ற வேண்டாம். இளம் வீரர்களுக்கு கோலி வேண்டுகோள்

Kohli-2

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

ind vs wi

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கோலி ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் கோலி கூறியதாவது : வளரும் இளம் பேட்ஸ்மேன்கள் என்னுடைய ஆட்டத்தை பின்பற்ற வேண்டாம். முதல் பாதி நான் மிகவும் மோசமாக ஆடியதாக நினைக்கிறேன். அதன் பிறகு அதனை உணர்ந்து மீண்டும் வேகமாக ஆட வேண்டும் என்று பலமாக அடிக்க ஆரம்பித்தேன் என்று சிரித்துக்கொண்டே கூறினார். மேலும் இந்த போட்டியில் நான் ராகுல் மீது அதிக அழுத்தத்தை கொடுக்கக்கூடாது நாமும் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

kohli 4

ஆனால் ராகுல் இருக்கும் வரை அவர் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் நான் இரண்டாம் பாதியில் எங்கு தவறு நடக்கிறது என்பதை புரிந்து மீண்டும் அதிரடியாக ஆட தொடங்கினேன். பந்துகளை சரியான நேரத்தில் கணித்து அடித்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. அணியின் வெற்றிக்கு பங்களித்தது எப்போதும் மகிழ்ச்சிதான் என்று கோலி கூறினார்.

- Advertisement -