எங்களால் இது முடியல. எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுவே காரணம் – உண்மையை ஒப்புக்கொண்ட கோலி

Kohli

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : முதல் இன்னிங்சில் நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. அதனாலேயே நாங்கள் இரண்டாம் பாதியில் ஆட்டத்தில் திரும்ப முடியாமல் போனது. மேலும் வில்லியம்சன் இந்த போட்டியை எவ்வாறு விளையாட வேண்டும் என்று அழகாக காண்பித்தா.ர் நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் ரன்களை அடிக்க முடியவில்லை.

- Advertisement -

sandeep

மேலும் நாங்கள் அடித்த நல்ல ஷாட்களும் பீல்டரிடம் சென்றன. அதனால் எங்களுக்கு பவுண்டரிகளும் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு மூன்று போட்டிகள் ஆகவே இதே போன்ற நிலைமை தான் இருந்து வருகிறது. நல்ல ஷாட்டை விளையாடினாலும் அது நேராக பீல்டர்களின் கைகளுக்கு சென்றது இதுவே தோல்விக்கு காரணம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.