அரையிறுதி போட்டிக்கு பின் தோனியின் ஓய்வு குறித்து பதில் அளித்த – கோலி

Kohli

ரிசர்வ் டே ஆன இநேற்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டைலர் 74 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ferguson

இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி ஆரம்பத்திலேயே அதலபாதாளத்திற்கு சென்றது. பின்னர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jadeja

போட்டி முடிந்து பேட்டி அளித்துக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் கோலி அளித்த பேட்டியில் நிருபர் ஒருவர் தோனியின் ஓய்வு பற்றி கோலியிடம் கேள்வி கேட்டார். பின்னர் அதற்கு கோலி விளக்கம் ஒன்றினை அளித்தார். அதில் தோனி குறித்து கோலி கூறியதாவது :

- Advertisement -

Kohli

தோனி இதுவரை ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை. மேலும் அணி நிர்வாகத்திடம் எந்த ஒரு தகவலும் இதுவரை தோனி அறிவிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் தனிப்பட்டமுறையிலும் அவர் ஓய்வு குறித்து எந்த ஒரு பேட்டியும் அளிக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து விளையாடுவார் அவர் ஆட்டம் சிறப்பாகவே உள்ளது. அவர் நினைக்கும் வரை அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்று கோலி கூறினார். இருப்பினும் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதால் கூடிய விரைவில் தோனி ஓய்வு அறிவிப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.