Virat Kohli : இதற்கு மேல் நான் என்ன செய்வதென்று தெரியவில்லை. தோல்விக்கு இதுதான் காரணம் – கோலி

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Kohli-1
- Advertisement -

ஐ.பி. எல் தொடரின் 17 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 84 ரன்களை அடித்தார்.

Kohli

- Advertisement -

பிறகு 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ற்றங்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சார்பாக க்றிஸ் லின் 43 ரன்களும், ரஸ்ஸல் 48 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் எங்கு தோற்றோம் என்றே தெரியவில்லை. கடைசி 4 ஓவர்கள் பந்துவீசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நுட்பமான ஒரு பந்துவீச்சாளர் இதுபோன்ற சூழலுக்கு அவசியம். வெற்றிக்கு இந்த இலக்கு போதும் என்றே நான் நினைத்தேன். ஆனால், எதிரணியில் ரஸ்ஸல் போன்ற வீரர்கள் இருக்கும் வரை இந்த இலக்கு பத்தாது மேலும், 20-25 ரன்கள் குவித்திருக்க வேண்டும்.

Russell

கடைசி 5 ஓவர்களில் 75 ரன்களை வைத்து கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நான் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. இந்த தொடர்முழுதுமே ஏமாற்றம் மட்டுமே ஏற்படுகிறது. இதை நான் அணி வீரர்களிடம் சொல்லி கஷ்டப்படுத்த போவதில்லை. அவர்களாக திரும்பி மீண்டும் அணிக்கு வெற்றியை தேடித்தருவார்கள் என்று கோலி கூறினார்.

- Advertisement -

அடுத்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையே இன்று மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ashwin

இதையும் படிக்கலாமே :

DC vs SRH : மைதானத்தின் மேற்கூரையின் மூன்றாவது தளத்திற்கு சிக்ஸ் அடித்த – பேர்ஸ்டோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

Advertisement