கடைசியாக நடைபெற்ற சில போட்டிகளில் நாங்கள் இந்த பிரச்சனையில் சிக்கி தவிக்கிறோம் – கோலி ஓபன் டாக்

Kohli-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

RCBvsSRH

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பிலிப் 32 ரன்களையும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் ஷர்மா மற்றும் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

அதன்பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஹா 39 ரன்களையும், ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 26 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வானார்.

sandeep

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இதுபோன்ற ஆட்டம் எப்போதுமே வெற்றிக்கு போதுமானதாக இருக்காது. 140 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியில் நல்ல ஸ்கோர் ஆக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் எடுத்த குறைவான ரன்கள் போட்டியை திருப்பி விட்டது. போட்டியின் இரண்டாவது பாதியில் டியூ மாற்றத்தை கொடுக்கும் என்று கணித்தோம்.

- Advertisement -

அதே போன்று அவர்கள் டாஸ் வென்று சிறப்பான தேர்வினை செய்தார்கள். இரண்டாவது இன்னிங்சின் போது டியூ காரணமாக பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் கடைசி சில போட்டிகளாக டியூ பிரச்சனையால் சிக்கிய வருகிறோம். இந்த போட்டியில் பேட்டிங்கில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

holder

அவர்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் மைதானத்தில் தன்மைக்கேற்ப அவர்கள் பந்து வீசினர். இருப்பினும் கடைசி போட்டியை வெற்றிகரமாக முடித்து டாப் 2 இடங்களுக்குள் நாங்கள் இடம்பெற கண்டிப்பாக இடம் பெறுவோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement