உண்மையிலேயே நான் எந்த பிளானும் போடல. எதார்த்தமா நடந்தது தான் அது – வெளிப்படையாக பேசிய கோலி

Kohli-1

ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKXIP

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

pooran

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி சுழற் பந்து வீச்சாளரான சாஹலை 20 ஆவது ஓவர் வீசவைத்தது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடைசி ஓவர் வீசுவது குறித்து நானும் சாஹலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை இதுதான் உண்மை. மேலும் இறுதி வரை போட்டி சென்றது சுவாரசியமானது.

- Advertisement -

chahal 1

நாங்கள் இந்தப் போட்டி சரியான நேரத்தில் திரும்பி வந்தோம். என்னைப் பொருத்தவரை போட்டி 18 ஆவது ஓவரிலேயே முடிந்துவிடும் என்று நினைத்தேன் இதுவே உண்மை. அதனாலேயே பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தேன். ஆனால் இறுதிவரை ஓவர் வரை வரும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி அந்த கடைசி ஓவரை சாஹல் வீசினார். இது யதார்த்தமாக அமைந்த ஒன்று என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.