Virat Kohli : எதிரணிக்கு இவரால் எந்த நேரத்திலும் நெருக்கடி கொடுக்க முடியும் – கோலி பேட்டி

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

bumrah 1

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்திய அணி இந்த போட்டியில் இறுதி வரை சென்று சிறப்பாக வெற்றி பெற்றது. ஷமி கடைசி ஓவரை சிறப்பாக வீசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். நமது அணியில் பும்ரா ஒரு முக்கியமான வீரர் அவர் எந்த அணிக்கு எதிராகவும் எந்த நேரத்திலும் விக்கெட்டை வீழ்த்தி அவர்களுக்கு அழுத்தத்தை அளிக்கும் வீரராக உள்ளார். இந்த போட்டியிலும் பும்ரா அதனை சிறப்பாக செய்து மிடில் ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக திகழ்ந்தார் என்று கோலி கூறினார்.

Advertisement