போட்டி டிராவில் முடிந்தாலும் நம்முடைய பலம் இந்த போட்டியில் வெளிவந்துள்ளது – கேப்டன் கோலி பேட்டி

Kohli-2

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் குவித்தது. இதனால் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 303 ரன்களை குவித்தது.

indvseng

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக ஐந்தாவது நாளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை காரணமாக கடைசி நாளில் ஒரு பந்து கூட வீச படாமல் போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து இந்த ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நாங்கள் மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் மழை வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஐந்தாவது நாளில் மழை வந்துவிட்டது. இந்த போட்டியில் நாங்கள் எவ்வாறு துவங்க நினைத்தோமோ அதைப்போன்றே பலமாக துவங்கி இருக்கிறோம்.

rain

மழையின் காரணமாக ஐந்தாவது நாளில் எங்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் அளவிலேயே இந்திய அணி இருந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் கிடைத்த முன்னிலை மிகவும் அற்புதமானது. முதல் இன்னிங்சில் போது 40 ரன்கள் வரை முன்னிலை கிடைக்கும் என்ற நினைத்த வேளையில் பின்வரிசையில் இறங்கிய பவுலர்கள் பேட்டிங் செய்த காரணமாக 95 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

- Advertisement -

Jadeja

இது இந்திய இந்திய அணிக்கு நல்ல பலம். இதுபோன்ற மைதானங்களில் பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கும் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் வரும் போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றிபெறும் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement