ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்ளோ கட்டுப்பாடா இருந்தா எல்லாம் பைத்தியம் ஆய்டுவாங்க – கோலி வருத்தம்

Kohli-1
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகள் பெரிய மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தான் நடத்தப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரும் அப்படித்தான் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்கள் வீரர்களும், வீரர்களை சார்ந்தவர்களும் அந்த மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தான் இருக்க வேண்டும். இதில் பல கறாரான விதிகள் இருக்கிறது.

Bio

- Advertisement -

இந்த விதியை மீறி விட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் வெளியாட்கள் யாரையும் சந்திக்கக்கூடாது. சக வீரர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் கொடுக்கப்படும் ஜிபிஎஸ் கருவியை எப்போதும் அணிந்து கொண்டே இருக்க வேண்டும். அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று பல விதிமுறைகள் இருக்கின்றன.

இதன் காரணமாக இனிமேல் நடத்தப்போகும் கிரிக்கெட் தொடர்களை வெகு சீக்கிரம் குறுகிய காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பிசிசிஐ விராட்கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி பேசியதாவது…
மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் விதிமுறைகள் கொடுமையானது. ஒருமுறை அல்லது இரண்டுமுறை பரவாயில்லை, ஆனால் அந்த விதிக்கு உள்ளாகவே மீண்டும் மீண்டும் பல மாதங்கள் இருக்கும்போது வீரர்களுக்கு மன அழுத்தம் மிக எளிதாக உருவாக வாய்ப்பிருக்கிறது.

Kohli

நீண்ட நாட்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக இருப்பதால் அவர்களை சந்திக்கின்றனர். இதன் காரணமாக மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். வீரர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ளலாம் போன்ற பல விதிமுறைகள் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருக்கிறார் விராட் கோலி.

INDvsAUS

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்னும் சில நாட்களில் மிக நீண்ட தொடர் துவங்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி 2 மாதத்திற்கு மேல் ஆஸ்திரேலியாவில் தங்கவேண்டும். அங்கும் இதே போன்ற மருத்துவ பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கின்றன. இதனைத்தான் சுட்டிக்காட்டி விராட் கோலி வெகு சீக்கிரமாக கிரிக்கெட் தொடர்களை முடிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Advertisement