4 ஆம் இடத்தில் இறங்கவேண்டிய டிவில்லியர்ஸை 6 ஆம் இடத்தில் களமிறக்க இதுவே காரணம் – கோலி வெளிப்படை

Kohli

ஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKXIP

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

pooran

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி துவக்கத்தில் பின்ச் மற்றும் படிக்கல் ஆகியோரது விட்டு இழக்க 3 ஆவது வீரராக கோலி களமிறங்கினார். ஆனால் வழக்கமாக வரும் நான்காவது வீரரான டிவில்லியர்ஸுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அதன் பிறகு ஐந்தாவதாக துபே வந்தார். அதன்பிறகு ஆறாவது வீரராக இறுதியில் ஏ.பி.டி டிவில்லியர்ஸ் களமிறங்கினார்.

- Advertisement -

abd 1

இந்நிலையில் ஏ.பி.டி யின் இந்த பேட்டிங் ஆர்டர் மாற்றம் ஏன் என்பது குறித்து போட்டி முடிந்து அளித்த பேட்டியில் கோலி தனது விளக்கத்தை அளித்து இருந்தார். அதன்படி கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் லெஃப்ட் ரைட் காம்பினேஷன் முறையை பின்பற்றினோம். அதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதை பொறுத்து வீரர்களை களமிறக்கினோம். இதுபோன்ற முடிவுகளை அவ்வப்போது எடுப்பது அவசியம். அதனால்தான் ஏபி டிவில்லியர்ஸை 6 ஆவது வீரராக களம் இறங்கினோம் என்று தெளிவான விளக்கத்தை கோலி அளித்திருந்தார்.