சென்னை டெஸ்டின் தோல்விக்கு இவர் காரணமில்லை. அவர் இந்திய அணியின் நிரந்தர வீரர் – சப்போர்ட் செய்த கோலி

Kohli
- Advertisement -

சென்னையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 13 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு விராட் கோலி பத்திரிக்கயைாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

anderson

- Advertisement -

அப்பேட்டியில் அவர் “வேகப்பந்து வீச்சாளர்களும் அஸ்வினும் தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸிலும் நல்ல விதத்தில் பந்து வீசினார்கள். வாஷிங்டன் சுந்தரும், ஷபாஸ் நதீமும் குறைந்த ரன்களைக் கொடுக்குமளவுக்கு பந்து வீசியிருக்கலாம் எனவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கூடுதலாக அழுத்தம் கொடுத்து இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். அப்படிப் பந்து வீசியிருந்தால் இங்கிலாந்து அணி 80-90 ரன்கள் குறைவாக எடுத்து இருந்திருப்பார்கள். பேட்டிங்கிலும் நாங்கள் முதல் இன்னிங்ஸில் 70-80 ரன்கள் இன்னும் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும்” என்றார்.

மேலும் “அப்படி நடந்திருந்தால் போட்டி அப்போது சமநிலையில் இருந்திருக்கும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது டெஸ்ட் அவர்கள் பக்கம் சென்றுவிட்டது. நீண்ட நேரம் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. பந்தின் தரம் சரியாக இல்லை. 60 ஓவர்களில் பந்து அதன் தன்மையை இழந்து விட்டது” என்றார் கோலி.

rahane 1

மேல குறிப்பிட்ட விதத்தில் ஆட்டத்தின் நிலைபாடு அமைந்திருந்தால் போட்டி சமநிலையில் இருந்திருக்கும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபொழுதே டெஸ்ட் அவர்கள் பக்கம் சென்றுவிட்டது. நாங்கள் முடிந்த வரையில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஆனால் அதைச் சரியாக எங்களால் செய்ய முடியவில்லை. பந்தின் தரம் சரியானதாக இல்லை. 60 ஓவர்களிலேயே பந்து அதன் தன்மையை இழந்து விட்டது எனவும் பேட்டியில் கோலி குறிப்பிட்டு இருந்தார்.

Rahane

ரஹானேவின் மோசமான பார்ம் குறித்த கேள்வி எழுப்பையில் பதிலளித்த கோலி “எப்படி புஜாரா நம்பர் 3 பேட்ஸ்மேனாக இந்திய டெஸ்ட் அணிக்கு எவ்வளவு முக்கியமானவரோ அதை போல 5ஆம் இடத்துக்கு ரஹானேவும் மிக முக்கியமானவர். அவரின் திறமை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இதனை பல முறை அவர் நிரூபித்தும் காட்டியுள்ளார் அதன் காரணமாகவே பல காலமாக அவர் அணியில நிலைத்து இருக்கிறார்” என கோலி குறிப்பிட்டுருந்தார்.

Advertisement