அவருக்கு பேட்டிங் தெரியாது. நீ போடு பாத்துக்கலாம் – நியூசி ஓப்பனரை ஸ்லெட்ஜிங் செய்த கோலி – வீடியோ இதோ

Sledging
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனான டாம் லதாமை ஸ்லெட்ஜிங் செய்துள்ளார் இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி. இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியானது தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் டாம் லதாம் ஆகியோர் களமிறங்கினர்.

IND

- Advertisement -

இந்த இன்னிங்சின் நான்காவது ஓவரை இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான பும்ரா வீசினார். அந்த ஓவரில் டாம் லதாம் சற்று தடுமாறவே அவரை ஸ்லெட்ஜிங் செய்ய ஆரம்பித்தார் விராட் கோஹ்லி. அவரை வெறுப்பேற்றும் விதமாக, அவருக்கு விளையாடவே தெரியவில்லை. நீ வீசும் பந்தை எப்படி பேட்டில் பட வைப்பது என்பதுகூட அவருக்கு தெரியாது என்று அவர் கூறினார்.

இது வீடியோவாக பதிவாகி உள்ளது என்பது மட்டுமில்லாமல், அவர் என்ன பேசினார் என்பதுகூட தெளிவாக பதிவாகியுள்ளது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஸ்லெட்ஜிங்கிலும் சிறப்பாக செயல்படும் விராட் கோஹ்லி, நேற்றைய நாள் ஆட்டத்திலும் அதை செய்திருக்கிறார்.

தொடர்ந்து விளையாடிய டாம் லதாம், 30 ரன்கள் அடித்து அஷ்வின் பந்தில் தன்னை ஸ்லெட்ஜிங் செய்த விராட் கோஹ்லியிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணியானது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்துள்ளது.

இன்று நடைபெற இருக்கும் நான்காம் நாள் ஆட்டத்தில் துவக்கத்திலேயே நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே அவர்களின் ரன் குவிப்பை தடுக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் இந்திய அணி பெரிய சிக்கலை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement