இதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. அதனால் நாங்கள் இதுகுறித்து கவலை படப்போவதில்லை – கோலி காட்டம்

Kohli-1

டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாக சுவாரசியம் குறைந்து வருவதாக பலராலும் பேசப்பட்டது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கம் உலக அளவில் அதிகரித்ததால் டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் சுவாரசியம் ஆகியவை குறைய தொடங்கியது. அந்த நேரத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. கடந்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவு பெறும் என ஒரு அட்டவணை ஐசிசி-யால் தொகுக்கப்பட்டது.

INDvsNZ

இந்த சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 9 நாட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் மூன்று டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணிலும், மூன்று தொடர்களை அயல்நாடுகளிலும் விளையாட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன.

இதில் ஒவ்வொரு தொடரும் இரண்டு முதல் ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக அமைக்கப்பட்டு புள்ளிகள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லார்ட்ஸில் இறுதிப் போட்டியில் மோதும் என ஐசிசி அறிவித்துள்ளது. அந்த புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 70 சதவிகித வெற்றி விகிதத்துடன் 420 புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டாவது அணியாக உறுதியாகி உள்ளது.

அதே வேளையில் இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றொரு அணியை முடிவுசெய்யும் தொடராக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும் மற்றொரு அணியாக தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதும் கேள்விக்குறியாகி உள்ளதால் அது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகளில் வழங்கும் முறையில் சற்று மாறுதல் ஏற்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென மாற்றம் செய்ததால் இப்போது எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. புள்ளிகள் பட்டியல் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை அதில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை. நாங்கள் தோற்றத்தைப் பற்றி வருத்தம் எங்களுக்கு கிடையாது என்று கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.