- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உள்ளாடை விளம்பரத்துக்காக கோலி வெளியிட்ட வீடியோ – இப்படி ஒரு விளம்பரம் தேவையா

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. தனது அபாரமான பேட்டிங் மற்றும் திறமையான கேப்டன்சி மூலம் இந்திய டெஸ்ட் அணியை நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு வந்தவர் என்பதில் சந்தேகமில்லை. தனது பேட்டிங்கிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறாரோ போன்று அதனைப் போன்றே தனது பிட்னஸ்க்கும் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பவர் விராட்கோலி.

தொடர்ந்து தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க கோலி கடினமான சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விராட் கோலியின் இந்த சிறப்பான செயல்பாடு மூலம் அவருக்கு ஏகப்பட்ட விளம்பர வாய்ப்புகள் வருகின்றன. அவரது ஜெர்சி எண்ணானான 18 அடிப்படையாக கொண்ட one 8 நிறுவனம் அவருடைய அனைத்து உபகரணங்களுக்கான சலுகைகளையும் செய்து வருகிறது.

மேலும் அவர் அணியும் ஆடைகளிலும் one 8 நிறுவனம் தவறாமல் இடம்பெறும் இந்நிலையில் அவர் உபகரணங்கள் மற்றும் ஆடைகள் மட்டுமின்றி உள்ளாடை போன்றவற்றையும் அந்த one 8 நிறுவனத்துக்காக விளம்பரப்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது one 8 நிறுவனத்தின் உள்ளாடை விளம்பரத்திற்காக கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் one 8 உள்ளாடை அணிந்து உள்ளது போன்றும் அதோடு அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பதிவிட்ட கோலி உடற்பயிற்சிக்கு ஒருநாளும் விடுப்பு கிடையாது என்றும் one 8 இன்னர்வேர் குறித்த ஹேஷ்டேகையும் அதில் பதிந்துள்ளதால் அவர் ஒரு விளம்பரத்திற்காகவே அந்த வீடியோவை பதிவு உள்ளது தெரியவந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இவ்வளவு பெரிய வீரர் இதுபோன்ற விளம்பரத்துக்காக வீடியோவை வெளியிடலாமா என்பதுபோல ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by