மீண்டும் 16 வயதுக்கு மாற உங்களால் முடியும். கோலியின் புகைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு – புகைப்படம் இதோ

Kohli

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி தற்போது தான் 16 வயதில் இருந்த ஒரு புகைப்படத்தை தற்போதுள்ள ஒரு புகைப்படத்தோடு ஒப்பிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட இந்திய ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பலர் சல்மான்கான் படமான தேரே நாம் என்ற படத்தில் இருப்பது போல நீங்கள் அப்போது உள்ளீர்கள் என்று அந்தப் புகைப்படத்திற்கு கமெண்டுகளை அளித்து அதை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பலர் தாடியை எடுக்காதீர்கள் எடுத்தால் மீண்டும் 16 வயதில் இருப்பதுபோன்ற அழகாக இளமை ஆகிவிடுவீர்கள். என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.