நேற்றிரவு கேர்ள் பிரண்டுடன் படம் பார்த்தேன் – கோலி வெளியிட்ட புகைப்படம்

Kohli

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த போட்டியின் மூலம் பிங்க் பந்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டனாகவும், சதம் அடித்த முதல் இந்திய வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்து அசத்தினார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி இந்திய அணியின் அடுத்த தொடரான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அது வரை ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ஓய்வினை வழக்கம்போல் தனது மனைவி அனுஷ்காவுடன் செலவழித்து வருகிறார்.

வழக்கமாக சற்று நீண்ட ஓய்வாக இருந்தால் வெளிநாடுகள் அல்லது மலைப் பகுதிகளுக்கு தனியாக செல்லும் இந்த காதல் ஜோடி தற்போது இந்த சிறிய ஓய்வினை இந்தியாவிலேயே கொண்டாடி வருகிறது. மேலும் நேற்று தியேட்டருக்கு சென்று கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் தியேட்டரில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “அபவுட் லாஸ்ட் நைட். அட் த மூவிஸ் வித் திஸ் ஹாட்டி” என்று குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.