ஐ.பி.எல் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா ? இதெல்லாம் கோலியால் மட்டுமே சாத்தியம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்து வருகிறார். தற்போது வரை 188 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 5727 ரன்கள் குவித்திருக்கிறார் 5 சதங்களும் 39 அரை சதங்களும் அடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

43 பந்துகளில் சரியாக 50 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. இந்த அரை சதத்தில் மிகப்பெரிய ஒரு வித்தியாசமான சாதனை உருவாகியுள்ளது. அதாவது இந்த 50 ரன்களை விராட் கோலி அடிக்கும் போது ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் மட்டுமே அடித்திருக்கிறார் .மீதமிருக்கும் 40 ரன்களும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஓடிய எடுத்திருக்கிறார்.

ஐ.பி.எல் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாகும். வேறு ஒரு எந்த பேட்ஸ்மேன் இந்த சாதனையை செய்தது இல்லை என்பது இதில் ஒரு கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இதே போட்டியில் ஒரு சிக்சர் அடித்து அதன் மூலம் 200 ஐபிஎல் சிக்சர் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

kohli

விராட்கோலி அதே நேரத்தில் அதிக அரை சதம் அடித்த வீரர்களில் ஷிகர் தவான் சாதனையை சமன் செய்திருக்கிறார். மொத்தம் 39 அரை சதங்கள் அடித்து இருக்கிறார் விராட் கோலி. முன்னதாக பெங்களூரு அணி 11 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kohli

உலகின் நம்பர் 1 வீரராக திகழும் விராட் கோலி ஐ.பி.எல் தொடர் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல புதுப்புது சாதனைகளை தொடர்ந்து படைத்துவருவதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement