- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நேற்றைய ஒரே போட்டியில் 2 சிறப்பான சாதனைகளை டி20 யில் படைத்த கோலி – விவரம் இதோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை குவிக்க அதன்பின்னர் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் நேற்று 4-வது வீரராக களமிறங்கிய கேப்டன் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இந்த 30 ரன்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் கோலி முக்கிய இரண்டு சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்படி இந்த தொடருக்கு முன்பாக இதுவரை கோலியும் ரோஹித்தும் 2633 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில் சமனில் இருந்தனர். இந்நிலையில் நேற்று கோலி அடித்த 30 ரன்கள் மூலம் அவர் ரோஹித்தின் சாதனையை கடந்து 2663 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இதுவரை 75 டி20 போட்டிகளில் விளையாடி 2663 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் நேற்றைய போட்டியில் அவர் சர்வதேச டி20 அரங்கில் கேப்டனாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by