- Advertisement -
ஐ.பி.எல்

6 போர்ஸ் 7 சிக்ஸ்.. 6 முறை 200.. வெளுத்த சுனில் நரேன்.. லக்னோவை நொறுக்கிய கொல்கத்தா.. 2 மிரட்டலான சாதனை

ஐபிஎல் 2024 தொடரில் மே ஐந்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 54வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் அதிரடியாக விளையாடினார்.

அவருடன் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியத்தில் சால்ட் 32 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த அங்க்ரிஸ் ரகுவன்சி நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து லக்னோ பவுலர்களை பந்தாடிய சுனில் நரேன் 27 பந்துகளில் அரை சதமடித்து மிரட்டலாக பேட்டிங் செய்தார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 12 ஓவர்கள் வரை லக்னோவை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

நொறுக்கிய கொல்கத்தா:
அதே வேகத்தில் பட்டைய கிளப்பிய அவர் ஒருவழியாக 6 பவுண்டரி 7 சிக்சருடன் 81 (39) ரன்களை 207.69 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அப்போது வந்த ஆண்ட்ரே ரசல் அதிரடியாக விளையாட முயற்சித்து 12 (8) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரியிலேயே மறுபுறம் நங்கூரமாக விளையாடிய அங்குரிஸ் ரகுவரன்சி 32 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து வந்த ரிங்கு சிங் அதிரடியாக விளையாட முயற்சித்து 16 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 23 (15), ரமந்தீப் சிங் சரவெடியாக 25* (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் கொல்கத்தா 235/6 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையையும் கொல்கத்தா படைத்துள்ளது.

- Advertisement -

அது போக இப்போட்டியையும் சேர்த்து இந்த வருடத்தில் கொல்கத்தா அணி 6 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக முறை 200 ரன்கள் அடித்த அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையும் கொல்கத்தா சமன் செய்துள்ளது. இதற்கு முன் 2023 சீசனில் மும்பை அணியும் 6 முறை 200+ ரன்கள் அடித்துள்ளது.

இதையும் படிங்க: தல தோனியின் வாழ்நாள் சாதனையை 12 வருடத்திலேயே தகர்த்த ஜடேஜா.. சிஎஸ்கே அணிக்காக வரலாற்று சாதனை

மறுபுறம் சொந்த மண்ணில் சுமாராக பந்து வீசிய லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்க இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் 236 ரன்களை சேசிங் செய்து வருகிறது.

- Advertisement -