ஒவ்வொரு இடத்திற்கும் ரெண்டு மூனு இருக்காங்க. இது நம்ம டீமுக்கு நல்லது தான் – வெற்றிக்கு பிறகு பேசிய கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவான் 98 ரன்களையும், விராட்கோலி 56 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Dhawan 1

- Advertisement -

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 62 ரன்களையும், க்ருனால் பாண்டியா 58 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பேர்ஸ்டோ 94 ரன்களும், ஜேசன் ராய் 46 ரன்களும் குவித்தனர்.

இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Dhawan 1

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : கடந்த சில காலங்களில் இது ஒரு ஸ்வீட்டான வெற்றி. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை நாங்கள் விரைவில் வீழ்த்தியது சிறப்பான ஒன்று. இந்த போட்டியில் நாங்கள் மீண்டு வந்த விதம் மிகவும் சிறப்பான ஒன்று. தற்போது மிகவும் பெருமையான இடத்தில் நான் இருக்கிறேன். ஒரு அணியாக எங்களது வீரர்கள் அவர்களது மன உறுதி மற்றும் திறனை இந்த போட்டியில் நிரூபித்துள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக ஷிகர் தவானின் இன்னிங்சை பாராட்டியாக வேண்டும். அதேபோன்று பின்வரிசையில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். இவர்கள் இருவரும் விளையாடிய விதம் ரன்களை அணிக்கு கொண்டுவந்தது. மற்றபடி அனைத்து வீரர்களும் சுயநலமின்றி தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்திய அணியில் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது நிறைய வீரர்கள் அணிக்கு விளையாட காத்திருக்கின்றனர். அவர்களை தேர்வு செய்வதும் மகிழ்ச்சிதான்.

Dhawan

மேலும் இந்திய அணியில் காத்திருக்கும் வீரர்கள் பற்றி பேசிய கோலி : இந்திய அணியில் தற்போது ஒவ்வொரு இடத்திற்கும் விளையாட இரண்டு, மூன்று வீரர்கள் தயாராக உள்ளனர். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல விடயம் தான். இந்திய அணியில் விளையாடாமல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களின் பலமும் அதிகம் தான் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement