Virat Kohli : தோல்விக்கு மைதானம் ஒரு குறை என்று சப்பைகட்டு கட்டினார் கோலி – ரசிகர்கள் ஆதங்கம்

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Ind vs Eng

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bairstow 1

இந்த போட்டியில் தோல்வி குறித்து பேசிய கோலி முக்கியமாக கூறியது : ஒரு பவுண்டரி எல்லை 59 மீட்டரிலும் ஒரு பக்கம் 82 மீட்டர் இருந்ததால் அடித்து அடைவதில் சிரமம் ஏற்பட்டது என்று கூறினார். ஆனால் அதிரடி பேட்டிங்க்கு பேர்போன ரோஹித் மற்றும் கோலி சிக்சர் அடிப்பதில் திணறினார்கள். மேலும் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரும் சிக்ஸ் அடிக்க தவறினால் அது மட்டுமின்றி தோனி தோல்வி உறுதி என்று நேரத்தில் லெக் திசையில் சிக்சர் ஒன்றினை அடித்தார்.

Dhoni 1

இதுபோன்ற மைதானத்தை முன்பே கணித்து நாம் அதிரடியாக ஆடியிருக்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்கள் கருத்து. மேலும் இதே மைதானத்தில்தான் இங்கிலாந்து அணி வீரர்கள் 13 சித்தர்கள் அடித்தார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் ரசிகர்களை முன்வைத்துள்ளனர். இதனை வைத்துப் பார்க்கும் போது இந்திய வீரர்கள் போட்டியை வெற்றியுடன் முடிக்க ஆர்வத்துடன் ஆடவில்லை. அவர்கள் 50 ஓவர்கள் விளையாடி ரன் ரேட்டை தக்க வைத்து விடவேண்டும் என்றே நினைத்து ஆடியதாக ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement