வெற்றிக்கு வாய்ப்பு இருந்தும் இந்த அரைமணி நேரம் மட்டுமே எங்களிடம் இருந்து வெற்றியை பறித்தது – கோலி வேதனை

Kohli

ரிசர்வ் டே ஆன இன்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டைலர் 74 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணிக்கு 240 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Nz

இந்த இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ராகுல், ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி ஆரம்பத்திலேயே அதலபாதாளத்திற்கு சென்றது. பின்னர் இறுதியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதியில் அவுட்டானார்.

அவர் அவுட் ஆனதும் இந்திய அணி இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று இந்திய ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர். தோனி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Jadeja

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கோலி கூறியதாவது : நாங்கள் முதல் பாதியில் நன்றாகவே ஆடினோம். பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். முதல் பாதி முடியும் வரை நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தோம். மேலும் நியூசிலாந்து அணியை சேசிங் செய்யக் கூடிய அளவிற்கான ரன்களில் கட்டுப்படுத்தியதாகவும் நினைத்தோம்.

Jadeja 1

ஆனால் அவர்களின் பந்துவீச்சில் முதல் அரைமணி நேரம் இந்தப் போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த முதல் அரை மணி நேரத்தில் நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தோம். இன்றைய இந்த சில மணி நேரம் எங்களது ஆட்டத்தை மாற்றியது நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். புது பந்தின் அவர்கள் சரியான இடத்தில் வீசி எங்களது விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள் இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ferguson

ஜடேஜா கடந்த 2 போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டோனியும் ஜடேஜாவுடன் சிறப்பான கூட்டணி அமைத்தார்கள். இலக்கு சிறியதாக இருந்த போது தோனி ரன்அவுட் ஆனது ஏமாற்றம் அளித்தது. இந்த வெற்றிக்கு நியூசிலாந்து அணி தகுதி ஆனது என்றே நினைக்கிறேன். இந்த தொடர் முழுவதும் நாங்கள் ஆடிய விதம் எனக்குப் பெருமை அளிக்கிறது. இந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறி பேட்டியை கோலி முடித்தார்.