என்னோட அந்த சாதனைக்கு இவர்தான் காரணம்…விராட் கோழி புகழாரம் – யார் தெரியுமா !

koli
- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு காரணம் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏ. பி. டி தான் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக சென்றிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-2 என்று தோற்றாலும், ஒரு நாள் தொடரை 5-1 என்று கைப்பற்றியது.இதன் மூலம் 25 ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்கா மண்ணில் வெற்றி வாகை சூடி சாதனை படைத்தது இந்திய அணி.

இதுகுறித்து தெரிவித்த விராட் கோலி அந்த தொடரை கைப்பற்றியதற்கு காரணம் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஏ. பி. டி தான் என்று தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரின் போது அவரிடம் இருந்து சில பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன் அதன் பின்னர் அந்த நுணுக்கங்களை ஒரு நாள் போட்டியில் பயன்படுத்தினேன் அதன் மூலமே எங்களால் அந்த ஒரு நாள் தொடரை கைபற்ற முடிந்தது என்று தெறிவித்திருந்தார்.

மேலும் இந்த விஷயம் தன்னுடன் ஐ பி எல் லில் ஆடும் ஏ. பி. டி க்கு கூட நான் இதுவரை தெரிவித்த தில்லை என்று சமீபத்தில் நடந்த ஐ பி எல் போட்டி ஒன்றின் இறுதியில் பேட்டியளித்த விராட் கோலி தெரிவித்துள்ளார்

Advertisement