இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-வது வெற்றியை பெற்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் உள்ளது. அதே வேளையில் கௌரவ வெற்றியை அடைய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் 2வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போது தோனியின் ரசிகர்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் 2வது டி20 போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்கள் பலரும் தோனியின் டீசர்ட் அணிந்து தல ஏழு என்ற எண்ணை பதித்து மைதானத்தில் வலம் வந்தனர். அதுமட்டுமின்றி தோனி குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு “வி மிஸ் யூ தோனி” என்ற பிளேகார்டை வைத்திருந்தனர். மேலும் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது தோனியின் ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர்.
இதனை மைதானத்தின் பவுண்டரி லைனில் பீல்டிங் நின்றுகொண்டிருந்த படி கவனித்த விராத் கோலியும் தோனியின் ரசிகர்களைப் பார்த்து நாங்களும் தோனியை மிஸ் செய்கிறோம் என்பது போல தன் விரல்களால் “வி” என்பது போல சைகை காட்டினார். இதனை அடுத்து ரசிகர்கள் தோனியின் பதாகைகளை கையில் வைத்திருந்தாலும் விராட் கோலி டோனியின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் செய்த சைகையால் நெகிழ்ந்து விட்டனர்.
— Gani pk (@Gani05071717) December 7, 2020
மேலும் இது குறித்த நிகழ்வும் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்றாலும் அவர் குறித்த செய்திகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது கிரிக்கெட் மைதானங்களில் சரி, வெளியிலும் சரி நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் தோனியின் ரசிகர்கள் செய்த இந்த செயலும், விராட் கோலியின் பதிலும் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.
Fans showed “We Miss You Dhoni” poster to Virat Kohli in yesterday’s match.
He Replied – “Me Too” 😍❤️#MSDhoni • @MSDhoni • #Dhoni pic.twitter.com/vxn87tKo9y
— DHONIsm™ ❤️ (@DHONIism) December 7, 2020
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் நல்ல புரிதல் நாம் ஏற்கனவே கண்டிருப்போம். அந்தவகையில் தற்போது கோலியின் இந்த செயல் ஒட்டுமொத்த தோனி ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.