சதத்தை தவற விட்டாலும் சாதனையை தவற விடாத விராட் கோலி ! தோனியை முந்தி புதிய சாதனை

kohli
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று துவங்கிய இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளைப் பெற்று சம பலத்துடன் உள்ளன.

ind vs rsa

- Advertisement -

இதனால் 1 – 1* என சமனில் இருக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரிலுள்ள நியூலேன்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது, இந்த முக்கிய போட்டிக்கு திரும்பிய இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட் செய்வதாக அறிவித்தார், இந்திய அணியில் விஹாரி மற்றும் காயமடைந்த சிராஜ்க்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

மோசமான பேட்டிங்:
இதை அடுத்து பேட்டிங்கை துவங்கிய இந்தியாவிற்கு நல்ல பார்மில் இருந்த தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் 12 ரன்களிலும் மயங்க் அகர்வால் 15 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர், அடுத்த ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி புஜாரா உடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினார்.

kohli

இதில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த புஜாரா 7 பவுண்டரிகள் உட்பட 43 ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ரகானே 9 ரன்களில் பொறுப்பின்றி அவுட்டாக மெதுவாக பேட்டிங் செய்ய முயன்ற ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 27 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

- Advertisement -

அடுத்து வந்த இந்திய வீரர்களும் தென்ஆப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்ட மறுபுறம் நங்கூரமிட்டு பேட்டிங் செய்த கேப்டன் விராட் கோலி 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 79 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

Kohli-2

இறுதியில் மோசமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா வெறும் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, தென் ஆப்பிரிக்கா பி சார்பில் அபாரமாக பந்துவீசிய ககிசோ ரபடா 4 விக்கெட்டுகளும் ஜென்சன் 3 விக்கெட்களும் எடுத்தனர்.

- Advertisement -

தனிஒருவன் கோலி:

நேற்றைய போட்டிகளில் இதர இந்திய வீரர்கள் சொதப்பிய போதிலும் கேப்டன் விராட் கோலி தனி ஒருவனாக பேட்டிங் செய்தார், வழக்கத்தைவிட மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது மெதுவான அரை சதத்தை அடித்தார், அத்துடன் கடந்த 2020 ஜனவரிக்கு பின் அவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை அடிக்க முடியாமல் திணறி வரும் அவர் நேற்றைய போட்டியில் சதம் எட்டும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டார்.

kohli

சூப்பர் சாதனை:

நேற்றைய போட்டியில் 79 ரன்களை எடுத்த விராட் கோலி தென்னாப்பிரிக்க மண்ணில் கேப்டனாக 1000 ரன்களை கடந்தார், இதன் வாயிலாக தென்னாப்பிரிக்க மண்ணில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார், இதற்கு முன் எந்த இந்திய கேப்டனும் தென்னாப்பிரிக்க மண்ணில் 1000 ரன்களை குவித்ததே கிடையாது.

அத்துடன் கிரிக்கெட் வரலாற்றில் 5 வெவ்வேறு நாடுகளில் 1000 ரன்களை குவித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இவர் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளில் கேப்டனாக 1000 ரன்களை விளாசி இந்த சாதனையை படைத்துள்ளார்.

Kohli

இதற்கு முன் இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளில் மட்டும் 1000 ரன்களை கேப்டனாக எடுத்திருந்தார், தற்போது விராட் கோலி அவரை முந்தி 5 நாடுகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement