கோலியின் அடுத்த சாதனை.! இங்கிலாந்து டெஸ்ட்டில் இது நடக்குமா..?

Virat-Kholi

இந்திய அணியின் ரன் மெஷின் என்ற பெருமையை கொண்ட கோலி இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை நிகழத்தி வருகிறார். இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கோலி, சச்சின் சாதனைகளை விரைவில் முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டனான கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் ஒரு சாதனையை படைக்க உள்ளார்.

kohli

இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 9 போட்டிகள் இந்தியாவிலும் 5 போட்டிகள் இங்கிலாந்து மண்ணிலும் விளையாடியுள்ளார். இந்த 14 போட்டிகளில் கோலி 992 ரன்களை குவித்துள்ளார். எனவே, இன்று (ஆகஸ்ட் 1) நடைபெறும் போட்டியில் கோலி 23 ரன்களை மட்டுமே பெற்றால் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் கோலியின் பெயரும் இடம்பெறும்.

ஏற்கனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 இந்திய வீரர்கள் 1000 ரன்களை குவித்துள்ளனர். அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தான் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.

சச்சின் டெண்டுல்கர் – 2,535 ரன்கள்

சுனில் கவாஸ்கர் – 2,483 ரன்கள்

ராகுல் டிராவிட் -1,950 ரன்கள்

குண்டப்பா விஸ்வநாத் -1,880 ரன்கள்

திலிப் வெங்சர்க்கர் – 1,589 ரன்கள்

கபில் தேவ் – 1,355 ரன்கள்

முகம்மது அசாருதீன் – 1,278 ரன்கள்

விஜய் மஞ்ச்ரேக்கர் -1,181 ரன்கள்

மகேந்திர சிங் தோனி -1,157 ரன்கள்

பரூக் எஞ்சினியர் -1,113 ரன்கள்

இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சாதனைகளை வைத்துள்ள கோலி ,9 போட்டிகளில் 843 ரன்கள் குவித்துள்ளார் அதில் 3 சதங்கள் மற்றும் 2 அரைசதங்களும் அடங்கும். ஆனால், இங்கிலாந்து மண்ணில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 134 ரன்களை மட்டுமே குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.