ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை முதலிடத்தை இழந்த ஸ்மித். தட்டி பறித்த கோலி – விவரம் இதோ

Smith

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிவுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Smith

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் சென்றவாரம் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றுள்ளார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி மோதிய 2வது பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்து 136 ரன்களை எடுத்தார். இந்த அருமையான சதம் மூலம் தற்போது 22 ஒரு புள்ளிகளை பெற்று 928 புள்ளிகளுடன் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோலிக்கும் ஸ்மித்திற்கும் வெறும் 5 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்பதால் இந்த முதலிடம் அவ்வப்போது மாறிமாறி இருக்க வாய்ப்புள்ளது.

Kohli-1

முதல் 10 இடங்களுக்குள் கோலி, ரஹானே, புஜாரா மற்றும் அகர்வால் என நான்கு வீரர்கள் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்ததாக ஜனவரி மாதம் நியூசிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -