தோனி எனக்கு சொன்னதைத்தான் நான் ரிஷப் பண்டிற்கு சொல்ல விரும்புகிறேன் – விராட் கோலி பேட்டி

Pant
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்தார். இந்திய அணியின் சிறப்பான வீரராக அவர் நிச்சயம் உருவெடுப்பார் என்று அவரை சுற்றி பேச்சுக்கள் தொடர்ந்து வர தற்போது கடந்த சில தொடர்களாகவே அவர் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க தொடரில் தனது பேட்டிங்கின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Pant

- Advertisement -

அதிலும் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்ததைவிட அவர் மூன்றாவது பந்திலேயே தேவையில்லாமல் இறங்கிவந்து தவறான ஷாட் ஆடியதே அவர்மீது விமர்சனம் ஏற்பட்ட காரணமாக அமைந்துள்ளது.

அணி எந்த சூழலில் இருக்கிறது என்று தெரியாமல் அவர் தேவையில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறியது அவர் மீது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணி கேப்டன் விராட்கோலி ரிஷப் பண்ட்டின் தொடர் சொதப்பல் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அதில் தோனி தனக்கு கூறிய ஒரு அட்வைஸ்-யும் அவர் நினைவு கூர்ந்தது மிக சுவாரசியமாக அமைந்தது.

pant 2

குறித்து அவர் கூறுகையில் : எல்லோருமே தங்களது கரியரில் ஒரு முக்கியமான தருணத்தில் தவறு செய்வது வழக்கம். இயல்பாகவே இது அனைவருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். முன்பு ஒருமுறை தோனி என்னிடம் சொன்ன அறிவுரை இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நாம் செய்கிற இரண்டு தவறுகளுக்கு இடையே ஆறு முதல் எட்டு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : அவரை இறக்கி நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பல. கடைசி போட்டியில் அவர் ஆடமாட்டார் – விராட் கோலி பளீர்

அப்படி இருந்தால் சர்வதேச கிரிக்கெட்டில் நாம் மிகப் பெரிய வீரராக மாறமுடியும் என்று கூறுவார். நிச்சயம் இது பண்ட்டுக்கும் பொருந்தும் இப்போது அவர் சொதப்பி இருந்தாலும் அவரின் திறமையை நான் அறிவேன். நிச்சயம் அவரது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார் என்று விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement