ஹீரோவாக நடிக்க நான் ரெடி. ஆனா இவங்கதான் ஹீரோயினா நடிக்கனும் – கோலி போட்ட ஒரே கண்டிஷன் என்னனு பாருங்க

Kohli

இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு பேர் அண்ட் ஹாண்ட்சம் விளம்பரத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா உடன் இணைந்து நடித்தார். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் மனக்கசப்பு காரணமாக பிரிந்து, பின்னர் மீண்டும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

anushka

திருமணத்திற்கு பிறகு பெரிதாக இருவரும் ஒன்றாக வாழ்ந்ததில்லை. இந்த சமயத்தில் கரோனாவின் காரணமாக கடந்த பல நாட்களாக இருவரும் ஒன்றாக இருக்கின்றனர். இந்நிலையில் விராட் கோலி இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி உடன் சமூக வலைதளத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனக்கு சம்மதம் என்று தெரிவித்துவிட்டு ஒரு கண்டிசன் போட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நான் தயார். ஆனால் என்னுடன் அனுஷ்காவும் நடிக்க வேண்டும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். நான் முன்பு இருந்த மாதிரி தற்போது இல்லை.

ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை எனக்கு உணர வைத்தவர் அவரே. நமக்காக நாம் வாழவேண்டும் என்பதை விட மற்றவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியவர் அனுஷ்கா சர்மா. என்னிடம் பிரச்சனை என்று வருபவர்களுக்கு இல்லாமல் எப்போதும் நான் உதவி செய்வேன்.

Anushka

- Advertisement -

இதனை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அனுஷ்கா சர்மாதான். நான் முன்னேற வேண்டும் சுயநலத்துடன் இருந்தேன். இவர் வந்த பின்னர்தான் நான் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதை உணர்ந்து செய்து வருகிறேன் இதனால் அவர் கண்டிப்பாக என்னுடன் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் விராட் கோலி.