என்னிடம் சொல்லாமல் செய்தது தவறு. ஆர்.சி.பி நிர்வாகம் மீது கோவப்பட்ட கோலி – காரணம் இதுதான்: IPL2020

RCB2019

ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இத்தனை வருடத்திலும் எதிர்பார்க்கப்பட்ட, அபாரமான அணி ராயல் சேலஞ்சர்ஸ் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. அந்த அணி எப்போதும் நல்ல அணியாக தான் கட்டமைக்கப்படும் ,ஆனால் களத்திற்கு வந்து விட்டால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. அந்த அளவிற்கு அந்த அணியை ஏதோ சனி பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.

rcb

இந்நிலையில் அந்த அணியின் அனைத்து சமூக வலைதள பக்கங்களின் கணக்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று இருந்த பெயர் தற்போது ராயல் சாலஞ்சர்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து வலைத்தளத்திலும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பேரை மட்டும்தான் மாற்றினார்கள் என்று பார்த்தால் பக்கங்களிண் ப்ரொபைல் பிச்சர், கவர் பிச்சர் என அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பக்கங்களில் இருந்த பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதனைக்கண்ட பெங்களூரு அணியின் கேப்டன் கோலி கடும் கோபம் அடைந்துள்ளார் என்று தெரிகிறது.

ஏனெனில் இன்று காலை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டதாவது : பதிவுகள் மறைந்துள்ளன மேலும் கேப்டனான எனக்கு கூட இதுகுறித்து தகவல் கொடுக்கப்படவில்லை. எந்த உதவி வேண்டுமானாலும் எனக்கு தெரிய தெரியப்படுத்துங்கள் என்று கோலி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -