சர்வதேச டி20 அரங்கில் இந்திய வீரராக உச்சத்தை படைத்த விராட் கோலி – மாபெரும் சாதனை விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 26 பந்துகளில் 53 ரன்களையும், ப்ரித்வி ஷா 42 ரன்களையும், பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் கோலி 43 ரன்களை அடித்தார். அவரை தவிர மற்ற யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் தேர்வானார்.

dc

இந்நிலையில் நேற்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 39 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் குவித்த கோலி பத்தாவது ரன்னை அடிக்கும்போது டி20 கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதில் 5 சதங்கள் மற்றும் 65 அரைசதங்கள் அடங்கும்.

மேலும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 134.25 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டில் க்றிஸ் கெயில் 13,296 ரன்களையும், பொல்லார்ட் 10,370 ரன்களையும், மெக்கல்லம் 9922 ரன்களையும், வார்னர் 9451 ரன்களையும், பின்ச் 9140 ரன்களையும், சோயப் மாலிக் 9926 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement