IND vs PAK : தேர்வுக்குழுவினரின் முடிவுக்கு பிடிக்குடுக்காத கோலி, ரவி சாஸ்திரி – விவரம் இதோ

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

Pakistan

- Advertisement -

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குழுவினரின் முடிவினை கோலி மற்றும் ரவிசாஸ்திரி ஏற்காதது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி காயமடைந்த தவானுக்கு பதிலாக பண்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பிய தேர்வுக்குழு தவானை உத்தேச அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக பண்டை அணியில் சேர்க்க கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் கோலி மற்றும் சாஸ்திரி ஆகியோர் இதனை ஏற்கமறுத்துள்ளனர்.

Pant

ஏனெனில் இரண்டு வாரங்களுக்குள் நிச்சயம் தவான் குணம் ஆகி விடுவார். அவர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது மிகவும் அவசியமான வீரராக இருப்பார் எனவே பண்ட் பொறுமையாக காத்திருக்க வேண்டும். தவானை நீக்கிவிட்டால் மீண்டும் அவரை அணியில் சேர்க்கமுடியாது ஏறுஏதாவது வீரர் காயமடைந்தால் மட்டுமே சேர்க்க முடியும் என்ற விளக்கத்தினையும் அளித்துள்ளார்கள். மேலும், ஒருவேளை தவான் காயம் குணமடையாது என்று உறுதி அடைந்தால் பண்ட்க்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement