தோனி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்ற போது கோலி சொன்ன அந்த வார்த்தை இப்போ நிஜமாயிருக்கு – ரசிகர்கள் வாழ்த்து

Kohli gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்னதாக தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு அவர் விட்ட அந்த கேப்டன் பதவி தோனியின் கைகளில் இருக்கு கோலியின் கைகளுக்கு சென்றது. பின்னர் கேப்டனாக பதவியேற்ற பிறகு பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் :

Dhoni

- Advertisement -

அடுத்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்திய அணி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சும் என்றும் அதற்காக இந்திய அணி வீரர்களாக நாங்கள் அனைவரும் கடினமாக உழைப்போம் எனவும் கோலி தெரிவித்திருந்தார். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தாலும் அடுத்த ஆண்டிலேயே 2017-ம் ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல தொடர்களை கைப்பற்றி இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி என்ற இடத்திற்கு முன்னேறியது.

அதனைத்தொடர்ந்து கோலி கூறிய அந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் 2017, 18, 19, 20 மற்றும் தற்போது வெளியாகியுள்ள 2021 ஆம் ஆண்டிற்கான தரவரிசை என அனைத்திலும் சேர்த்து ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக இந்திய அணி விளங்கி வருகிறது. இந்நிலையில் விராட் கோலி கூறியதைப் போலவே ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியை முதலிடத்தில் வைத்துள்ளதாக ரசிகர்கள் அனைவரும் அவருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Dhoni

கோலியின் தலைமையில் இந்திய அணி மறக்க முடியாத பல டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. அதனைத் தொடர்ந்து எந்த நாட்டிற்கு சென்றாலும் தங்களது வெற்றி கொடியை நாட்டியது இந்திய அணி.

IND-1

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கூட ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் ஒருமுறை டெஸ்ட் தொடர் வெற்றியை ருசித்தது. இப்படி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை விரைவில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement