படிக்கல் சூப்பரா ஆடுனாரு. ஆனாலும் நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – கோலி பெருமிதம்

Kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது.

dube

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் மிடில் ஆர்டரில் வந்த ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் தேவாத்தியா ஆகிய சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி ஒரு டீசன்டான இலக்கை பெங்களூரு அணிக்கு நிர்ணயம் செய்து. அதனை தொடர்ந்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரரான தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராத் கோலி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் பெங்களூரு அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது 4 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் :

padikkal

இந்த போட்டியில் படிக்கல் சிறப்பான ஒரு இன்னிங்சை விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு முதல் தொடரில் விளையாடிய அவர் சிறப்பாகவே விளையாடி இருந்தார். அதனை தொடர்ந்து இந்த போட்டியிலும் அவர் 30 ரன்களை கடந்தது வேகமாக ரன்களை குவித்தார். இந்த மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் அற்புதமாக உள்ளது. அதன் காரணமாகவே பந்துவீச்சாளர்கள் சரியான லெந்தில் வீச சிரமப்படுகின்றனர். டி20 கிரிக்கெட் பொருத்தவரை பார்ட்னர்ஷிப் என்பது மிக முக்கியம். அந்த வகையில் இந்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. படிக்கல் சிறப்பான இன்னிங்சை ஆடி இருந்தபோதிலும் எங்களது அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

harshal patel

அவர்கள் இந்த போட்டியில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக டெத் பவுலிங்கில் தற்போது பெங்களூரு அணியில் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அதன் காரணமாகவே இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று வருகிறோம். நிச்சயம் இதற்காக நான் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும். இந்த வெற்றிப் பயணத்தை அப்படியே தொடருவோம் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement