ஜடேஜாவிற்கு சரியான மாற்றுவீரர் இவர்தான் என்பதை நிரூபித்து விட்டார் – இளவீரருக்கு கோலி புகழாரம்

Kohli
- Advertisement -

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பையும் இந்தியா கிட்டதட்ட நெருங்கி விட்டது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அஸ்வின் மற்றும் அக்ஷர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ind

- Advertisement -

இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இப்படி எல்லாம் இதற்கு முன்னர் நடந்ததில்லை.இரண்டு நாட்களுக்குள்ளேயே ஒரு ஆட்டம் முடிந்துவிட்டது. ஜடேஜா காயம் அடைந்து ஓய்வு எடுத்த பின்னர், பலரும் இந்திய அணியை வீக்காகவே பார்த்தனர். அவர் இல்லை என்று உறுதி ஆனதும் இந்திய அணியில் ஜடேஜாவுக்க இனையான ஆல் ரவுண்டர் இல்லை. இப்போது ஜடேஜாவிற்கு யார் ? மாற்றுவீரர் என்று பல வகையில் கேள்விகளை எழுப்பினார்கள்.

ஆனால் அவருக்கு பதிலாக சரியான மாற்று வீரராக அக்ஷர் பட்டேல் உள்ளே வந்தார். ஜடேஜா போலவே வேகமாக பந்தை ஸ்பின் செய்தார். உயரமாக இவர் வீசிய பந்துகள் தான் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. குறிப்பாக ஸ்டம்ப் லைனிலியே பந்தை வீசி பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்தார்.

axar

இவரது பவுலிங்கில் ஸ்வீப் அவ்வளவு ஈசியாக ஆடவிட முடியாது. அதேபோன்று இவரின் பவுலிங்கில் தடுப்பு ஆட்டமும் பலிக்காது , சட்டென்று எல்.பி.டபள்யூ செய்து விடுவார்.இவரது பந்தை எதிர்கொள்வது சற்று கடினம். ஒரே லைனில் ஸ்கேல் வைத்து போடுவது போல் அக்ஷர் தொடர்ந்து வீசுகிறார்.

axar

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அக்ஷர் பட்டேலை எதிர்கொள்ளவே ஒரு கட்டத்தில் திணறினார்கள். அணியில் ஒரு இடதுகை ஸ்பின் பவுலர் இருப்பது எப்போதும் அணிக்கு நல்லது. அக்சர் பட்டேல் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.குஜராத் கிரிக்கெட் வாரியம் எப்போதும் இடதுகை ஸ்பின் பவுலர்களை உருவாக்குவதில் கெட்டிகாரர்கள்.அதில் அக்ஷர் மட்டும் விதிவிலக்கல்ல என்று கோலி அக்ஷரை புகழ் பாடியுள்ளார்.

Advertisement