சிறப்பாக விளையாடினாலும் பண்ட்க்கு அரையிறுதியில் இடம் கிடைக்காது. அதன் காரணம் இதுதான் – கோலியின் புது பிளான்

Pant

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் இன்று அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

ind

இந்நிலையில் முக்கியமான இந்த போட்டியில் சில மாற்றங்களை கொண்டு வர கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி குறிப்பாக பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மூன்று போட்டியில் பேட்டிங் செய்த பண்ட் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தவிர்த்து மீதி இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் சிறப்பாகவே செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக 34 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 48 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

இருப்பினும் அவரது ஃபீல்டிங் மிக மோசமாக உள்ளது. விக்கெட் கீப்பரான பண்ட் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படமுடியவில்லை. மேலும் தோனி தொடர்ந்து கீப்பிங் செய்து வருவதால் அவரை மாற்ற முடியாது அதனால் பண்ட் பீல்டிங் செய்தே ஆக வேண்டிய நிலை உள்ளது. பீல்டிங் மோசமாக உள்ளதால் அவருக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும் என்று பீல்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார். ஆனால் அவரை கணக்கிடும்போது தினேஷ் கார்த்திக் சிறப்பாக பீல்டிங் செய்கிறார்.

Karthik

கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி தினேஷ் கார்த்திக் மற்றும் பண்ட் ஆகிய இருவரையும் அணியில் சேர்த்து விளையாடியது. ஆனால் அரையிறுதியில் ஜடேஜாவை அணியில் சேர்க்கும் திட்டம் இருப்பதால் கார்த்திக் அல்லது பண்ட் இவர்கள் இருவரில் ஒஒருவர் அணியில் இடம்பிடிக்க முடியாது. எனவே அதன்படி அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார், பண்ட் நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது. இருப்பினும் 4 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி இறங்கினால் பண்ட் அணியில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement