MS Dhoni : தோனியை வைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த கோலி வைத்திருக்கும் மாஸ்டர் பிளான் – விவரம் இதோ

உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன. இந்த போட்டி

Dhoni
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன. இந்த போட்டி குறித்து தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளுமே மிக பலம் வாய்ந்த அணிகள்.

pandya

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடர்ந்து இரு போட்டியிலும் வென்று இன்று இந்தியாவை சந்திக்கிறது. அதேபோன்று இந்தியா முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சிறப்பாக வீழ்த்தி இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டியாகும். இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த கோலி வைத்திருக்கும் திட்டம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அதே போன்று சிறப்பான துவக்கம் கிடைத்து கோலியும் ஓரளவு சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் 4-வது வீரராக தோனி விரைவில் களம் புகுந்து அதிரடியாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது. மேலும் அதன் பின்னர் ராகுல், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் இருப்பதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை அடிக்க வாய்ப்புள்ளது.

Dhoni 1

அப்படி இல்லாமல் இரண்டாவது இரண்டாவது பேட்டிங் செய்ய நேர்ந்தால் சேஸிங்கில் தோனி எப்பொழுதும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதால் 6 ஆவது வீரராகவே களமிறங்குவார். சேஸிங்கில் சென்ற போட்டியில் மூன்றாவது வீரராக கோலியும் 4-வது வீரராக ஓரளவுக்கு சிறப்பாகவே ஆடினார்கள். எனவே சேஸிங்கில் இந்திய அணியில் மாற்றம் இருக்காமலும் முதல் பேட்டிங் என்றால் தோனியின் இடத்தை மாற்றும் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது. இந்தத் திட்டத்தை வைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி கேப்டன் கோலி வியூகம் வகுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement