இந்த 4 பேரு மட்டுமே பெங்களூரு அணியில் சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் எல்லாம் – மனம்திறந்த கோலி

Kohli

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் கோலி இந்த தொடரில் பெங்களூரு அணியில் சிறப்பாக விளையாடிய நான்கு வீரர்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இந்த வருடத்தின் புதிய கண்டுபிடிப்பாக படிக்கல் மற்றும் சிராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதாகவும், அதன் பின்னர் எப்பொழுதும் போல சாகர் சிறப்பாக பந்துவீசினார் என்று கூறினார்.

- Advertisement -

Padikkal 2

அதுமட்டுமின்றி ஏபிடி குறித்து சொல்லவே வேண்டாம் அவர் எப்போதும் போல பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இவர்கள் நால்வரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அணிக்கு தேவையான பங்களிப்பை அளிக்கவில்லை என்று தான் கருதுவதாக கோலி மனம் திறந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.