காலிஸின் சாதனையை தாண்டி உலக டாப் 10 ல் முன்னேற்றம் கண்ட கோலி – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார்.

Jadeja 1

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருந்த ஜாக் காலிஸ் 314 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் காலீஸ் 11579 ரன்கள் குவித்து டாப் 10 ல் 7 இடத்தில் இருந்தார்.

ஆனால் அதனை தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 241 ஆவது போட்டியில் முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 60 ரன்கள் என்ற சாராசரியுடன் விளையாடி வரும் கோலி நேற்றைய போட்டியில் இந்த சாதனையை 56 ரன்கள் எடுத்திருந்தபோது காலிஸின் ரன்களை கடந்தார்.

Kohli-1

தற்போது ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் 18426 அதற்கடுத்து சங்கக்காரா 14234 அதற்கடுத்து பாண்டிங் 13704 ரன்களுடன் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கோலி அடித்த இந்த 85 ரன்கள் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11609 ரன்களுடன் கோலி டாப் 10ல் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement