இந்திய அணி வீரர்கள் பிட்னஸ்க்கு முக்கியத்துவம் செலுத்த இதுவே காரணம் – கோலி ஓபன் டாக்

Kohli
- Advertisement -

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் சமீபகாலமாக உடற் பகுதியில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதற்கு காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோர் யோ-யோ டெஸ்ட் வைத்து வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிப்பதே இதில் முக்கிய பங்காற்றுகின்றன.

indiateam

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியாவின் வீரர்களின் இந்த உடல் தகுதிக்கு தூண்டுகோலாக உள்ள விடயத்தை கோலி வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த கோலி
கூறியதாவது :

நாங்கள் வீரர்களின் உடற்தகுதிக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறோம். ஏனெனில் கால்பந்து வீரர்களின் பயிற்சியைப் பார்ப்போம் அவர்கள் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவர்களால் போட்டியில் பங்கேற்க முடியும். ஆகவே அவர்களைப் போன்று பயிற்சி, ஓய்வு நேரம் மற்றும் உணவுமுறை ஆகியவற்றை நாங்கள் கவனித்து அதன்படி நடக்கிறோம்.

கிரிக்கெட்டையும், கால்பந்தையும் ஒப்பிட முடியாது இருப்பினும் அவர்களின் உடற்தகுதியே அவர்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது. எனவே கால்பந்து வீரர்களை போன்ற உடற்தகுதி இருந்தால் கிரிக்கெட்டையும் சிறப்பாக விளையாடலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும் கிரிக்கெட் வீரர்களை விட கால்பந்து வீரர்களே சிறந்த உடற் தகுதி உடையவர்கள் என கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement