கியரை மாற்றி ஸ்மித்தின் முதல் இடத்திற்கு ஆப்பு வைக்கவுள்ள கோலி – விவரம் இதோ

Smith

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

Ind

மேலும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி தனது ஏழாவது இரட்டை சதத்தை டெஸ்ட் போட்டியில் அடித்து அசத்தினார்.

மேலும் அவர் அடித்த 254 ரன்கள் அவர் டெஸ்ட் போட்டியில் அடித்த தனிநபர் அதிகபட்ச ரன்களாக அமைந்தது. இந்த இரட்டை சதத்தின் மூலம் கோலி ஏராளமான சாதனைகள் படைத்தது நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலிலும் கோலி இந்த இரட்டை சதத்தின் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளார். கோலி அடித்த இந்த இரட்டைசதத்தின் மூலம் அவர் மொத்தம் 36 புள்ளிகளை பெற்றுள்ளார்.

Kohli

இதன் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி தற்போது 936 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் ஸ்மித்தை நெருங்க ஒரே ஒரு புள்ளி தேவைப்படுவதால் விரைவில் அவர் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஸ்மித். 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது எனவே அடுத்து வரும் போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடி விளையாடி முதலிடத்துக்கு முன்னேறுவார் என்பது உறுதி.

- Advertisement -