கோலி இந்த விடயத்தில் இந்தமுறை ரவிசாஸ்திரி குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை – தேர்வுக்குழு விளக்கம்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

Ravi

- Advertisement -

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய பி.சி.சி.ஐ க்கு பரிந்துரை செய்தது அதன்படி ரவி சாஸ்திரி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி பயிற்சியாளர் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி இம்முறை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் இருந்த கருத்துவேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு பயிற்சியாளர் தேர்வில் கோலி ரவி சாஸ்திரி தான் பயிற்சியாளராக வேண்டும் என்று தனது ஆதரவினை கருத்தாக பி.சி.சி.ஐ க்கு முன்வைத்தார்.

Ravi

அதன் காரணமாக ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு முதன்முறையா பயிற்சியாளராக தேர்வானார். இந்த முறை புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு முன்னதாகவே பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்து பயிற்சியாளர் பதவிக்கான தகுதிகளை நெறிமுறை படுத்தியது. அதுமட்டுமின்றி பயிற்சியாளர் தேர்வில் இந்திய அணி கேப்டன் மட்டுமல்ல யாரும் தலையிட கூடாது என்று கூறியிருந்தது.

ravi koli 2

எனவே இந்த முறை எந்த ஒரு விடயத்தையும் கோலி பி.சி.சி.ஐ யிடம் கூறவில்லை. இதுகுறித்து பயிற்சியாளர் தேர்வுக்குழு தலைவர் கபிலதேவ் கூறியதாவது : இம்முறை புதிய பயிற்சியாளர் குறித்து கோலி எங்களிடம் எந்த கருத்துக்களையும் கூறவில்லை. மேலும் நாங்களும் கோலியிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வானது முழுக்க முழுக்க எங்களுடைய தேர்வு தான் என்றும், பயிற்சியாளர் விடயத்தில் கோலி எந்த விதத்திலும் அவரது செல்வாக்கை உபயோகிக்கவில்லை என்றும் தெளிவாகியுள்ளது.

Advertisement