புத்தாண்டு அன்று புதிய ஹேர்கட்டுக்கு மாறிய கோலி – புகைப்படம் இதோ

Kohli

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றிகரமாக கைப்பற்றியது. அதற்கடுத்து நாளை மறுதினம் 5ஆம் தேதி துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளை பயிற்சியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் வருடம் இந்திய அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் தோல்வியை தவிர மற்ற அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. இந்நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டிலும் இந்திய அணி பல முக்கிய தொடர்களில் வெற்றியைக் குறிவைத்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு முழுவதும் வெளிநாட்டு தொடர்களில் அதிக போட்டிகளில் இந்திய அணி சந்திக்க இருப்பதால் அந்த போட்டிகளுக்காக ஆயத்தமாகி வருகிறது. மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஆயத்தமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புத்தாண்டு வந்ததை முன்னிட்டு தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புது விதமான ஹேர் கட்டுக்கு மாறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by KohliSensation (@virat_kohli_18_club) on

பிரபல ஹேர் கட் நிபுணரான ஹாகிம் கோலியின் இந்த புதிய லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே இந்திய வீரர்கள் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் மற்றும் கோலியின் இந்த லுக் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -