- Advertisement -
இந்திய கிரிக்கெட்

7-வது இடத்தில் தவித்த இந்தியாவை நம்பர் ஒன்னாக மாற்றிய விராட் கோலி – இனி இப்படி ஒரு கேப்டன் கிடைப்பாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். கடந்த 2017 முதல் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்து வந்த அவர் ஒரு ஐசிசி உலக கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் கடந்த 2021 ஐசிசி 20 ஓவர் உலகக்கோப்பையுடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதையே காரணமாக வைத்து வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என கருதிய பிசிசிஐ அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பறித்தது. அப்படிப்பட்ட வேளையில் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளது இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

விராட் கோலி மாதிரி வருமா:
விராட் கோலியை போன்றதொரு டெஸ்ட் கேப்டன் இந்தியாவிற்கு கிடைப்பாரா என்று பார்த்தால் அதற்கு சாத்தியம் மிகமிக குறைவு என்றே கூறலாம். ஏனென்றால் கடந்த 2014ஆம் ஆண்டு எம்எஸ் தோனி ஓய்வு பெற்றபோது ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் பரிதவித்த இந்தியாவை 2016 முதல் தற்போது முதல் தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக முன்னிறுத்திய பெருமை விராட் கோலியை சேரும்.

முதலில் சுழல் பந்துவீச்சை நம்பியிருந்த இந்திய அணியின் அடிப்படையை மாற்ற நினைத்த அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு கொடுத்து இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றினார்.

- Advertisement -

வெளிநாடுகளில் வெற்றி:
அதன் காரணமாக இந்திய மண்ணில் இமயமலை போன்ற வெற்றிகளை குவிக்க தொடங்கிய இந்தியாவை வெளிநாடுகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்தார். வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டுமெனில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி கூறுவதை வேதவாக்காக எடுத்துக் கொண்டார்.

அதை சாத்தியப்படுத்த வேகப்பந்து வீச்சால் மட்டுமே முடியும் என கருதிய அவர் மற்ற இந்திய கேப்டன்களை விட வேகப்பந்து வீச்சை 100% ஆதரித்தார். அந்த சமயத்தில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் என இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதிர்ச்சியடைய வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியாவுக்கு வெளியே இந்தியா வெற்றி நடை போடத் துவங்கியது.

- Advertisement -

சரித்திர கேப்டன்:
2018 க்கு பின் 90களில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா எந்த அளவுக்கு உலக கிரிக்கெட்டை மிரட்டியதோ அந்த அளவுக்கு விராட் கோலி தலைமையிலான இந்தியாவும் உலகின் எந்த மூலையிலும் வெற்றிபெரும் தன்மையைப் பெற்றது. அதன் பலனாக 70 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்வ செய்த இந்தியா டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது “விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் காலத்துக்கும் மின்னக்கூடிய மாணிக்கம்’ ஆகும்.

ஆக்ரோஷமான கேப்டன்:
தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் கூட விடாத மனஉறுதியுடன் ஆக்ரோஷமாக போராடி வெற்றியை எட்டிப் பிடிப்பது, “எதிரணி மிரட்டினால் அதற்காக கூழை கும்பிடு போடாமல் அவர்களை எதிர்த்து மிரட்டுவது” போன்ற குணங்களை இந்திய அணியில் விராட் கோலி தான் புகுத்தினார். அத்துடன் “டெஸ்ட் கிரிக்கெட் போரிங்” என கூறிய பல இந்திய ரசிகர்கள் விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா வெற்றி பெறுவதை பார்த்து டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கத் துவங்கினார்கள்.

இதையும் படிங்க : 140 வருட ஆஷஸ் வரலாற்றில் ஸ்டுவர்ட் ப்ராட் பிரம்மாண்ட சாதனை! – அப்படி என்ன சாதனை தெரியுமா?

இன்னும் சொல்லப்போனால் தற்போது இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் “எனக்கு பிடித்த கிரிக்கெட் வகை டெஸ்ட் கிரிக்கெட்” என கூறும் அளவுக்கு “துவண்டு கிடந்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி உயிர் கொடுத்தார்” என்று கூறினால் மிகையாகாது.

- Advertisement -
Published by