மீண்டும் இன்றைய போட்டியில் தியாகியாக மாற இருக்கும் கோலி. என்ன பண்ணப்போறார் தெரியுமா ?

Kohli-1

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பகலிரவு போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ind

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக யார் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் தவானுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கிய ராகுல் சிறப்பாக விளையாடி அசத்தினார். அதுமட்டுமின்றி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரோகித் விளையாடாததால் அவருக்கு பதிலாக ராகுல் தவானுடன் இணைந்து மீண்டும் கலக்கினார். இதனால் தற்போது இந்திய அணியின் துவக்க வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த கோலி கூறியதாவது : மூன்று பேரும் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது. அதற்காக நான் நான்காமிடத்தில் களமிறங்க தயாராக இருக்கிறேன். வீரர்கள் பார்ம் எப்போதும் அணிக்கு சிறப்பானது. சிறந்த வீரர்கள் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அணிக்கு எப்படிப்பட்ட காம்பினேஷன் வேண்டுமோ அதை நான் தேர்வு செய்வேன்.

Rahul

ரோகித் சர்மா, ராகுல் மற்றும் தவான் ஆகிய 3 பேரும் விளையாடுவதால் நான் அணியை பேலன்ஸ் செய்து எடுத்துச் செல்ல விரும்புகிறேன். அதனால் நான் 4 ஆவது இடத்தில விளையாட மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தில் களம் இறங்கி விளையாட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எந்த இடத்தில் களம் இறங்கினாலும் நான் அதைப் பற்றி யோசிப்பதில்லை.

- Advertisement -

Rahul

ஒரு அணியின் கேப்டனாக என்னுடைய பணி எப்போதும் தயாராக இருப்பதுதான் கேப்டனாக எனக்கு தற்போது விளையாடும் வீரர்களை பார்ப்பது மட்டும் வேலை கிடையாது. எனக்கு பின்னரும் அணி சிறப்பாக இருக்க வேண்டும் மிகச்சிறந்த அணியை உருவாக்கி மற்றவர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கோலி கூறினார்.