Virat Kohli : வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இவர்கள் விளையாடமாட்டார்கள் – கோலி

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது

Kohli
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

india

- Advertisement -

இந்நிலையில் இன்று இந்திய அணி லீக் சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இந்த போட்டியை இந்திய அணி முழு உத்வேகத்துடன் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை கோலி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சில போட்டிகளாக பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார்கள். அதனால் இன்றைய போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jadeja 1

ஒருவேளை புவி இன்றைய போட்டியில் விளையாட தகுதி பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங் ஆர்டரிலும் சிறிய மாறுதல் இருக்குமா என்பது இன்றைய போட்டி தொடங்கும் முன் தெரியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement