டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை இழந்த கோலி. காரணம் இவர்தான் – விவரம் இதோ

Kohli-Smith
- Advertisement -

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மென் பிரிவில் விராட் கோலி முதலிடத்தை வகித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது முதலிடத்தை தற்போது இழந்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விகாரி மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக விளையாட கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 76 ரன்கள் அடித்தார். அதனை தவிர கோலி இந்த தொடரில் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

மேலும் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் கோலி முதல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிவந்துள்ளார்.

Smith

பந்தினை சேதப்படுத்திய விவகாரத்தை தொடர்ந்து ஓராண்டு தடைபெற்ற ஸ்மித் தனது முதலிடத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு டெஸ்ட் விளையாட்டுக்கு திரும்பிய ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்து மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி தற்போது கோலியை தாண்டி முதலிடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement